Latestமலேசியா

தாமரை பூஜை மேடைகள்; நான்காவது கிளை சிரம்பானில் பிரமாண்ட திறப்பு விழா

சிரம்பான், ஜனவரி-19-சாமி மேடை என சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தாமரை பூஜை மேடைகள் நிறுவனமான Lotus Luxury Altars தான்…

இத்துறையில் பத்தாண்டுகள் அனுபவத்தைக் கொண்ட இந்நிறுவனம், அதன் நான்காவது கிளையை சிரம்பானில் திறந்துள்ளது.

ஜாலான் யாம் துவானில் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்ற அதன் திறப்பு விழாவில், முக்கியப் பிரமுகர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நெகிரி மாநில இந்திய வர்த்த சங்கத்தின் தலைவரும் மலேசிய இந்திய வர்த்த சங்கத்தின் உதவித் தலைவருமான திருநாவுக்கரசு, Fright Watch பாதுகாவலர் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ ஸ்ரீ காந்தி, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் தினாளன் ராஜகோபாலு, மலேசிய இந்து சங்க நெகிரி மாநிலத் தலைவர் கோபி குருக்கள், Lavanya Jewellers கருணா உள்ளிட்ட பிரமுகர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேட்ப, சாமி மேடை, சாமி அறைக் கதவு, நிலை வாசம், ஊஞ்சல் மற்றும் மர வேலைப்பாடுகள் அனைத்தையும் இந்த தாமரை பூஜை மேடைகள் நிறுவனம் செய்துத் தருகிறது.

அதிலும், தெய்வீகக் கலை நயத்துடன் செதுக்கப்பட்ட மேடைகள், ஒளிவீசும் அழகிய வடிவமைப்புகள், தலைமுறைகள் தாண்டியும் நிலைக்கும் தரம் – இவை அனைத்தும் இந்நிறுவனத்தின் அடையாளமாகும்.

குறிப்பாக வீட்டுக்கே வந்து இலவசமாக அளவெடுத்து தரும் அளவுக்கு நம்பகமான மற்றும் தரத்தில் உயர்ந்தது இந்த தாமரை பூஜை மேடைகள்…

ஜோகூர் பாருவில் 2 கிளைகள், கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் ஒரு கிளை என 3 கிளைகள் வாயிலாக இதுநாள் வரை வாடிக்கையாளர்களுக்கு மேற்கண்ட சேவைகளை தாமரை பூஜை மேடைகள் வழங்கி வந்தது.

என்ற, போதிலும் தொலைதூர வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கிடும் நோக்கில், பக்தி, அழகு, தரம் – மூன்றையும் இணைத்து, இந்த நான்காவது கிளையை சிரம்பானில் திறந்துள்ளது.

எனவே, தூரத்தில் இருப்பவர்கள் இனி ஜோகூர் பாருவுக்கோ அல்லது கோலாலாம்பூருக்கு இந்நிறுவனத்தைத் தேடிப் போகத் தேவையில்லை.

உங்கள் அருகிலேயே, நீங்கள் விரும்பும் வடிவங்களில், வண்ணங்களில், வேலைப்பாடுகளில் உங்கள் இல்லங்களை தரமான, நம்பிக்கைக்குரிய, அழகிய பூஜை மேடைகளால் இந்நிறுவனம் அலங்கரிக்கிறது.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இலவச அனுப்பும் சேவையும் உண்டு.

உங்கள் இல்லத்தில் தெய்வீக ஒளியை மலரச் செய்ய Lotus Luxury Altars தயாராக உள்ளது…

தொடர்புக்கு: சுரேஷ் – 010 406 2404

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!