
இஸ்கண்டார் புத்ரி, ஜனவரி-20 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள முத்தியாரா ரீனி போலீஸ் நிலையத்தில் 22 வயது இளைஞன் ஒருவன் புகார் முகப்பிலிருந்த போலீஸ் அதிகாரியை திடீரென தாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினான்.
அவன் முதலில் மோட்டார் சைக்கிள் ரிம்மை எறிந்து, பின்னர் அதிகாரியின் முகத்தில் குத்தினான்.
அதில், அதிகாரி தோளில், கண் பகுதியில் மற்றும் காலில் காயமடைந்தார்.
மல்லுக்கட்டியப் பிறகு போலீஸார் ஒருவழியாக அவனைக் கட்டுப்படுத்தியதாக, இஸ்ண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன் கூறினார்.
கையிலிருந்த பையில் கத்தி மற்றும் மோட்டார் ரிம்மும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவ்விளைஞன் மனநிலை சரியில்லாதவராகத் தோன்றியதால், அவனை சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.



