Latest
வியட்னாம் பெண்ணிடம் கொள்ளையிட்ட 8 மணி நேரத்திற்குள் ஆடவன் கைது

கோலாலம்பூர், ஜன 21 – வியட்னாம் பெண்ணிடம் கொள்ளையடித்த
ஆடவன் ஒருவனை எட்டு மணி நேரத்திற்குள் போலீசார் வெற்றிகரமாக கைது செய்யதனர்.
அந்த சந்தேகப் பேர்வழி நேற்றிரவு மணி 9.15 அளவில் செராஸ் தாமான் ஸ்ரீ Bahtera வில் கைது செய்யப்பட்டான். இதற்கு முன்னதாக நேற்று மதியம் ஒரு மணியளவில் 23 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து ரொக்கம் மற்றும் கைதொலைபேசியை அந்த ஆடவன் கொள்ளையிட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் 8,000 ரிங்கிட்டாகும் என செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் ரோஸ்லி டாவுட் ( Mohd Rosdi Daud ) தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 392 மற்றும் 397 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஜனவரி 23 ஆம்தேதிவரை அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் .



