
புத்ராஜெயா, ஜனவரி-22- X தளத்தில் உள்ள Grok எனும் AI chatbot செயலி இனியும் ஆபாசமான, அருவருப்பான உள்ளடக்கங்களை உருவாக்க முடியாது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதனை உறுதிப்படுத்தினார்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, முன்னதாக Grok தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டது.
இதையடுத்து X நிறுவனத்தின் பிரதிநிதிகள் புத்ராஜெயாவில் ஃபாஹ்மியை சந்தித்து விளக்கமளித்தனர்.
Grok‑ன் படங்களை எடிட் செய்யும் மற்றும் வீடியோ உருவாக்கும் அம்சங்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் போது உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
இதனை வரவேற்ற ஃபாஹ்மி, இது பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என்றும், குழந்தைகள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்றும் கூறினார்.
தற்போது X தொடர்பான ‘takedown’ கோரிக்கைகள் சுமார் 50% என MCMC தரவு காட்டுகிறது.
இதை ‘மிதமானது’ என ஃபாஹ்மி குறிப்பிட்டாலும், தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தினார்.
ஜனவரி 11-ஆம் தேதி MCMC ஏற்கனவே Grok‑க்கு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது
இப்போது ஃபாஹ்மியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதிகாரிகள் இணைய பாதுகாப்பை உறுதிச் செய்ய தொடர்ந்து கண்காணித்து வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



