Latestமலேசியா

ஆவணங்கள் போலியாக்கும் கும்பலின் தரகராக இருந்த ஆடவருக்கு 12 மாதம் சிறை

மலாக்கா , ஜன 23 – ஆவணங்கள் போலியாக்கும் கும்பலின் தரகராக இருந்த மியன்மார் ஆடவருக்கு அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. 54 வயதுடைய சான் லிவின் என்ற அந்த நபருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன.

அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அந்த ஆடவருக்கு மாஜிஸ்திரேட் ஷர்டா ஷியான்ஹா ( Sharda Shienha Mohd Suleiman ) சிறைத் தண்டனை விதித்தார்.

1966 ஆம் ஆண்டின் கடப்பிதழ் சட்டத்தின் கீழ் 8 குற்றச்சாட்டுக்களுடன் , போலீ கடப்பிழ் வைத்திருந்தது மற்றும் மற்றவருக்கு சொந்தமான கடப்பிதழ்களை வைத்திருந்ததும் அடங்கும்.

மொத்தம் 17 குற்றச்சாட்டுக்களுக்கும் 165 மாதம் சிறைத் தண்டனையை மாஜிஸ்திரேட் விதித்த போதிலும் கைது செய்யப்பட்ட தினமான 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதியிலிருந்து இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிடப்பட்தால் சான் லிவின் 12 மாதம் மட்டுமே சிறையில் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இதே நீதிமன்றத்தில் மியன்மாரைச் சேர்ந்த கணவன்- மனைவியான ஒரு தம்பதியர் போலி ஆவணங்களின் வாடிக்கையாராக இருந்த குற்றத்திற்காக முறையே ஆறு மற்றும் 8 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!