
ஈப்போ, ஜனவரி-24-பேராக், ஈப்போவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், RM37.3 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையும் பேராக் போலீஸும் இணைந்து அச்சோதனையை நடத்தின.
அந்த பங்களா, அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலால், போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சோதனையின் போது, மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) மற்றும் MDMA என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் சிக்கின.
சில போதைப் பொருட்கள், சிமெண்ட் கட்டிகள் போல மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக, 30 வயதிலான ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் கைதுச் செய்யப்பட்டனர்.
இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் மலேசியாவை போதைப்பொருள் சேமிப்பு மற்றும் விநியோக மையமாக பயன்படுத்தியதாக போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது.
கைதானவர்கள், அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இக்கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர் என நம்பப்படும் சீன பிரஜைக்கு தற்போது போலீஸ் வலை வீசியுள்ளது.



