
ஜகர்த்தா, ஜன 26 – மேற்கு ஜாவாவில் பண்டோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையின்போது மொத்தம் 25 உடல்கள் மீட்கப்பட்டன.
அனைத்து உடல்களும் அடையாளம் காணும் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக பேரிடர் நிர்வாகத்திற்கான தலைவர் அப்துல் முஹாரி ( Abdul Muhari ) தெரிவித்தார்.
மரணம் அடைந்தவர்களைத் தவிர இந்த நிலச்சரிவில் 23 பேர் உயிர் தப்பிய வேளையில் இதர 81பேர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
வானிலை நிலைமைகளைத் தவிர, தேடல் நடவடிக்கைகளின் போது மீட்புப் பணியாளர்களுக்கு அந்த இடத்தின் நிலப்பரப்பு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து Pasir Langau கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை மணி 2.30 அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு குடியிருப்பு இடங்கள் புதையுண்டன.



