
கோத்தா பாரு, ஜனவரி 27 – மூன்று வயது தனது சொந்த மகளை கொலை செய்ய முயன்ற 24 வயதுடைய ஆடவன், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது, நீதிபதியின் முன்னிலையில் அந்த ஆடவன் குற்றத்தை மறுத்து, மேல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதியன்று, கிளாந்தான் Pasir Puteh பகுதியில் உள்ள Tok Bali கடற்படை தளம் அருகே நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்டுகின்றது.
இந்தக் குற்றம் தீவிரமானது என்பதால் சந்தேக நபருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



