
சுங்கை பட்டாணி, ஜனவரி-28-கெடா, சுங்கை பட்டாணில் ஒரு பேரங்காடி அருகே அடையாள ஆவணமின்றி ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறியது.
மரணமடைந்தவர் சுமார் 40 வயதுடைய ஆணாக இருக்கக்கூடும்.
அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், இதுவரை அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போதைக்கு இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன குடும்ப உறுப்பினரைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்தில் வந்து உடலை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



