Latestமலேசியா

திரெங்கானு குவாலா நேருஸ் தீ விபத்தில் பலியான கட்டிடத் தொழிலாளி

திரெங்கானு, ஜனவரி 28 – நேற்று மாலை திரெங்கானு குவாலா நேருஸ் மாவட்டத்தில் உள்ள Mengabang Telipot, Kampung Pak Tuyu பகுதியிலிருக்கும், Tanjung Gelam தேசிய பள்ளிக்கருகே அமைந்திருக்கும் பழைய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், கட்டிடத் தொழிலாளி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

49 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, அவரது வீடு தீப்பற்றியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்காக, சாவியை எடுக்க அவர் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால், தீ வேகமாக பரவியதால் அவர் வீட்டிற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக மீட்பு பணி வேலைகளில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டிருந்தாலும், உயிரிழந்தவரின் வீடும் மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமடைந்தன. பின்னர் உயிரிழந்தவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!