Latestமலேசியா

தைப்பூசம் 2026: தண்ணீர் மலையில் KUSKOP MADANI நிகழ்ச்சி

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-30 – KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசத்தில் KUSKOP MADANI எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

தைப்பூச நாளான பிப்ரவரி 1-ஆம் தேதி, ஜோர்ஜ்டவுன், ஸ்ரீ ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் முன்பாக இந்நிகழ்வு நடைபெறுகிறது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்காக இலவச சுகாதார பரிசோதனை, குழந்தை தாய்ப்பால் அறை, அன்னதானம் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 200 Wira KUSKOP தொண்டர்கள் கூட்ட நெரிசல் நிர்வகிப்பில் உதவத் தயாராக உள்ளனர்.

அதே நேரத்தில், KUSKOP மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் தொழில் முனைவோருக்கான நிதி உதவி தகவல், பயிற்சி மற்றும் வழிகாட்டல், தொழில் முனைவோர் பதிவு, கூட்டுறவு ஆலோசனை போன்ற சேவைகளையும் வழங்குகின்றன.

பேங்க் ராக்யாட், தெக்குன் நேஷனல், தேசிய தொழில்முனைவுக் கழகம், SMECorp உள்ளிட்டவை தகவல் மையஙளை திறந்திருக்கும்.

இந்நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழாவை சிறப்பிக்கும் விதமாக மட்டுமல்லாமல், மலேசியா மடானி உணர்வின் கீழ் சமூக ஒற்றுமை மற்றும் தொழில் வளர்ச்சியை வலியுறுத்தும் ஒரு மேடையாகவும் அமைகிறது.

இந்து பெருமக்களுக்கு இதுவோர் அரிய வாய்ப்பாகும்.

எனவே, இந்த ஓரிடசேவை மையத்தை நன்கு பயன்படுத்தி உரியத் தகவல்களைப் பெற்று பயனடையுமாறு, அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!