
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 5 – MEX நெடுஞ்சாலையில், நீல எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்தி வேகமாக சென்ற வெள்ளை நிற எம்.பி.வி வாகனம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில், அந்த வாகனம் சைரன் ஒலியுடன் போக்குவரத்தில் வளைந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மற்ற வாகனங்கள் வழிவிட்டுச் சென்றதாகவும் தெரிகிறது.
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் Zamzuri Isa, இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசாரை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை என்றும், காணொளியின் மூலம் வாகனத்தின் பதிவு எண் அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவசர சேவை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட விளக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது மோட்டார் வாகன விதிகளின் கீழ் குற்றம் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அரசு அதிகாரியாக நடித்து சென்றதும் மற்றொரு மிக பெரிய குற்றம் எனவும் கூறப்பட்டுள்ளது.



