மலேசியா

நிர்வாகக் கோளாறு குற்றச்சாட்டு; HRD Corp-ல் மேலும் 3 அதிகாரிகள் இடைநீக்கம்

புத்ராஜெயா, பிப்ரவரி-21,

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp-ல் மேலும் 3 நிர்வாக அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவான PAC, தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC வெளியிட்ட அறிக்கைகளில் நிர்வாகக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்கங்கள், விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் மட்டுமே என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அர்த்தமில்லை என்றும், HRD Corp தலைமைச் செயல் அதிகாரி Shamir Aziz தெரிவித்துள்ளார்.

வசூலிக்கப்பட்டும் பயன்படுத்தப்படாத வரிகள், Menara Ikhlas கோபுரம் கையகப்படுத்தல், பங்குத் முதலீட்டு நிர்வாகம் ஆகியவை தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

HRD Corp தனியாக நடத்திய ஆய்வில், கடுமையான கட்டுப்பாடுகள், தெளிவான அறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு அவசியம் என ஏற்கனவே கண்டறிந்துள்ளது.

இதையடுத்து நிர்வாக நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முயற்சியில் HRD Corp முழு வீச்சில் இறங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!