
ஜோர்ஜ் டவுன், மார்ச் 26-பினாங்கில் பட்டப் பகலில் சீன சுடுகாட்டில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட ஆடவரும் மாதுவும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இக்குற்றத்தை 58 வயது எம். ஜெகதீசன் ( Jagathesan) மற்றும் 37 வயதுடைய ஹலிலா அபு பக்கர் (37) ( Halila Abu Bakar ) ஆகியோர் ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்தத் தண்டனையை விதிக்கப்பட்டது.
மார்ச் 22ஆம் தேதி காலை மணி 8.30க்கு Ayer Itam , Batu Gantung சீனர் சுடுகாட்டில் அந்த இருவரும் இணைந்து அநாகரிகச் செயலில் ஈடுபட்ட காணொளி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது



