
கோலாலம்பூர், ஏப்ரல்-11-PPR அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து பதின்ம வயது பையன் ஒரு கல்லை கீழே எறியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இச்சம்பவம் கோலாலம்பூர் டேசா பெட்டாலிங்கில் நடந்ததாக நம்பப்படுகிறது.
நடைப்பாதையில் நடந்து வரும் அப்பையன், ஒரு வீட்டின் முன் நின்று, அங்கிருந்து ஒரு கல்லை எடுத்து கீழே வீசுவதும், கீழிருந்து யாரோ சத்தம் போடுவதும் வீடியோவில் கேட்கிறது.
அவன் வீசியக் கல் பட்டு ஒருவர் சிராய்ப்புக் காயமடைந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த பலர், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத செயல்கள் உயிருக்கு ஆபத்தானவை என்பதால், சம்பந்தப்பட்ட பையனுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
2018-ஆம் ஆண்டு ஸ்ரீ பந்தாய் PPR-ரில் நிகழ்ந்த இதே போன்றதொரு சம்பவத்தில், 21-ஆவது மாடியிலிருந்து நாற்காலி வீசப்பட்டதில், 15 வயது பையன் பரிதாபமாக உயிரிழந்தான்.



