
கோலாத் திரெங்கானு, ஜன 31 – கோழி முட்டை மானியங்களில் A, B மற்றும் C கிரேடுகளை மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் D மற்றும் E கிரேடுகளுக்கு விலைக் குறைப்பு இல்லையென
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான திரெங்கானு துணை இயக்குநர் முகமட் சக்ரி முகமட் சலே ( Mohd Sakhri Mohd Salleh ) தெரிவித்தார்.
A கிரேட் முட்டையின் விலை ஒரு முட்டைக்கு 42 சென் ஆகவும், B கிரேட் முட்டைக்கு 40 சென்னாகவும் C கிரேட் முட்டை 38 சென்னாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு மூன்று சென் உதவித் தொகை வழங்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
D மற்றும் E வகை முட்டைகளுக்கு மானியம் இல்லை என்று அவர் கூறினார்.
A, B மற்றும் C கிரேடுகளை விட D மற்றும் E வகை கோழி முட்டைகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என Mohd Sakhri தெரிவித்தார்.
30 A கிரேட் கோழி முட்டைகளைக் கொண்ட ஒரு தட்டின் விலை 12 ரிங்கிட் 60 சென்னாகவும் , B பிரிவுக்கான 30 முட்டைகளின் விலை 12 ரிங்கிட்டாகவும், C பிரிவுக்கான முட்டைகளின் விலை 11 ரிங்கிட 40 சென்னாகவும் டுங்குன் (Dungun) , Paka பேரங்காடியில் விற்கப்படுவதாக வைரலான விலைபட்டியல் குறித்து அவர் கருத்துரைத்தார்.
D கிரேடுக்கான 30 முட்டைகள் 12 ரிங்கிட் 80 சென்னுக்கும் , E பிரிவுக்கான 30 முட்டைகள் 10 ரிங்கிட் 90 சென்னாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.