Latestஉலகம்

AI அம்சங்களுடன் அமெரிக்காவில் அட்டகாசமாக அறிமுகமான Apple iPhone 16

கலிஃபோர்னியா, செப்டம்பர்-10 – iPhone பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் Apple நிறுவனம் 4 வகையான iPhone 16 விவேகக் கைப்பேசி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max ஆகியவையே ஆகப்புதிய அந்த 4 மாடல்களாகும்.

A18 browser-ருடன், AI அம்சங்கள், கேமரா கட்டுப்பாட்டு பட்டன் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இப்புதியத் தலைமுறை மாடல் அட்டகாசமாக வெளியீடு காண்கிறது.

48 மெகாபிக்சல் ஆற்றலுடன் கூடிய ultra wide பிரதான கேமரா மூலம், hybrid focus, pixel auto focus உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும்.

புதியக் கேமரா கட்டுப்பாட்டு பட்டன் இருப்பதால், auto zoom செய்யவும் முடியும்.

பயனர்கள் சில task-குகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் action button-னும் இடம் பெற்றுள்ளது.

முந்தைய 15 மாடல்களைப் போலவே இப்புதிய மாடலிலும் ‘டைப் சி’ charging வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, teal, ultramarine ஆகிய 5 வண்ணங்கங்களில் வரும் இந்த iPhone 16 (128GB) கைப்பேசியின் விலை 799 அமெரிக்க டாலரில் தொடங்குகிறது.

முன்பதிவுகள் செப்டம்பர் 13-ல் தொடங்குகின்றன; செப்டம்பர் 20 முதல் கைப்பேசி கையில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!