Latestமலேசியா

AI, தரவு மையம் குறித்து கூகுள் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்திய பிரதமர் அன்வார்

லீமா, நவம்பர்-15 – லத்தின் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமா சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கு தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான கூகுளுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

APEC மாநாட்டுக்கு வெளியே, கூகுள் நிறுவனத்தின் அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொதுக் கொள்கையின் அனைத்துலகத் தலைவர் கரண் பாட்டியாவுடன் அச்சந்திப்பு நடைபெற்றது.

AI அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களின் எதிர்காலம் ஆகியவை அச்சந்திப்பில் முக்கிய இடம் பெற்றன.

குறிப்பாக தரவுகளின் கசிவைத் தடுக்கவல்ல தெளிவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை பிரதமர் அதன் போது வலியுறுத்தினார்.

அப்பிரச்னையை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அமைச்சுகளுக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் அன்வார் சொன்னார்.

பிரதமர் முன்னதாக, APEC நாடுகளின் வர்த்தகத் தலைவர்களுக்கு, ABAC எனப்படும் Apec வர்த்தக ஆலோசக மன்றத்தின் மலேசியத் தலைவரும், Westport துறைமுகத்தின் நிர்வாக இயக்குநருமான ரூபன் எமிர் ஞானலிங்கம் (Ruben Emir Gnanalingam) அளித்த விருந்திலும் கலந்துகொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!