
கோலாலம்பூர், மார்ச்-14 – ம.இ.காவின் கல்விக் கரமான MIED-யின் கீழ் செயல்படும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மேலும் ஏராளமான இந்திய மாணவர்களைச் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீன மாணவர்களின் நுழைவு கணிசமாக அதிகரித்து வருவது, பல்கலைக்கழகத்தின் தரத்திற்கான அங்கீகாரமாகும்.
அது மகிழ்ச்சியே என்றாலும் நம்மின மாணவர்களுக்கும் ஏய்ம்ஸ்ட் முதன்மைத் தேர்வாக இருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.
அம்முயற்சியின் ஒரு பகுதியாக மாநில ம.இ.கா வாரியாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு இலவச கல்விச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு கால மாற்றத்திற்கு ஏற்ப AI அதிநவீன தொழில்நுட்பம் குறித்த படிப்பையும் ஏய்ம்ஸ்ட் தொடங்குகிறது.
இன்று நடைபெற்ற ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பிறகு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவ்வாறு சொன்னார்.