
கோலாலம்பூர், ஜனவரி-24-AirAsia குழும நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து வணிகம், AirAsia X Berhad அல்லது AAX கீழ் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பென்யாமின் (Benyamin) இஸ்மாயில் இன்று முதல் தலைமை செயலதிகாரி (CEO) பதவியிலிருந்து தலைமை நிர்வாகி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
48 வயது பென்யாமின், 2010-ஆம் ஆண்டு AirAsiaவில் சேர்ந்தவர்.
பின்னர் 2015 முதல் AAX நிறுவனத்தின் CEO-வாக பணியாற்றி வந்த அவர், புதிய பதவியிலும் நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருவார்.
இதனிடையே, மலேசியப் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில், AAX நிறுவனம் பரவலாக போ லிங்கம் என அறியப்படும் தருமலிங்கம் கனகலிங்கத்தை, AirAsia குழுமத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜனவரி 19 முதல் நியமித்துள்ளது.
2001-ஆம் ஆண்டு AirAsiaவில் சேர்ந்த போ லிங்கம், இனி மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் AirAsiaவின் திட்டமிடல், செயல்பாடு மற்றும் விரிவாக்கத்தை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



