
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மங்கோலிய பெண்ணான Altantuya Shaariibuu மரணம் தொடர்பாக, அரசுக்கு பொறுப்பு இல்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, அவரது குடும்பம் Federal நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
Altantuya- வின் குடும்ப வழக்கறிஞர் கூறுகையில், பணியாளர்களின் சட்டவிரோத செயல்களுக்கு அரசு மறைமுக பொறுப்பேற்க வேண்டுமா என்ற முக்கிய சட்டக் கேள்வி தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், கொலை நடந்த போது முன்னாள் போலீஸார் Sirul Azhar Umar மற்றும் Azilah Hadri ஆகியோர் அதிகாரப்பூர்வ பணியில் இல்லை என்பதால், அரசுக்கு பொறுப்பு இல்லை என்று தீர்ப்பளித்தது. அதே நேரத்தில், Sirul, Azilah மற்றும் Razak Baginda மீது உள்ள பொறுப்பு தொடரும் என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது.
2015 ஆம் ஆண்டு சிருல் மற்றும் அசிலா கொலைக்காக தண்டிக்கப்பட்டனர். மேலும் Altantuya குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு 5 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1.38 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது.
Altantuya-வின் தந்தை கூறுகையில், இந்த வழக்கு இழப்பீடு பெறுவதற்காக அல்ல என்றும் நீதியும் பொறுப்புணர்வும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே தொடரப்படுவதாகவும் தெரிவித்தார்.



