
அம்பாங், நவம்பர்-7 – 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்த பை நேற்று சிலாங்கூர் அம்பாங்கில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
Ampang Point Mall பேரங்காடியில் உள்ள ஒரு வங்கியிலிருந்து பாதுகாவலர் நிறுவனமொன்றால் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு அப்பணம் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதனை ஓர் அறிக்கையில் உறுதிபடுத்திய அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசாம் இஸ்மாயில் (Azam Ismail), குற்றவியல் சட்டத்தின் கீழ் அக்கொள்ளைச் சம்பவம் தீவிரமாக விசாரிக்கப்படுவதாகச் சொன்னார்.