
பாலிக் புலாவ், செப்டம்பர் 4 – நேற்றிரவு, ‘Anime’ கதாபாத்திரமான ‘குருமி டோகிசாகி’ (Kurumi Tokisaki) போல ஆடை அணிந்திருந்த பெண் ஒருவர், பாயன் லெப்பாஸ் பகுதியிலுள்ள கான்டோமினியத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அப்பகுதி மக்கள் முதலில் பெரிய சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அப்பெண் சாலையில் அசையாமல் கிடந்தததை பார்த்து தகவல் தெரிவித்தனர்.
சம்பவத்துக்கு முன், அந்தப் பெண் அடிக்கடி கான்டோமினியம் லாபியில் ‘Anime’ ஆடை அணிந்து வருவதை மக்கள் கவனித்திருந்தனர் என்றும் கடைசியாக அவர் தனது தாயுடன் இருந்தார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், அந்த பெண் தனது காதலன் விட்டு விலகிச் சென்றதால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் என்றும், உயிரிழக்கும் தருவாயில் அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் அப்பெண்ணின் தாயார் தகவல் தெரிவித்துள்ளார்.
மரணம் உறுதி செய்யப்பட்ட பிறகு, அவரது உடல் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.