Latestமலேசியா

Apple பயனர்களுக்கு MCMC எச்சரிக்கை; iOS-ஐ உடனே புதுப்பிக்கவும்

புத்ராஜெயா, மார்ச்-20-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, உடனடியாக iOS-ஐ புதுப்பிக்குமாறு Apple பயனர்களை வலியுறுத்தியுள்ளது.

DarkSword எனப்படும் ஆபத்தான பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால், புதுப்பிக்கப்படாத சாதனங்கள் இணையத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகலாம் என அது எச்சரித்தது.

இந்த குறைபாடு மூலம் ஹேக்கர்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருடவும், சாதனத்தை வேவு பார்க்கவும் வாய்ப்புள்ளதை அவ்வாணையம் சுட்டிக் காட்டியது.

எனவே, எந்தவோர் அச்சுறுத்தலிலும் இருந்து பாதுகாக்க, உச்சக் கட்ட தடுப்பு நடவடிக்கையாக ஆகப் புதிய iOS பதிப்புக்கு இப்போதே புதுப்பித்துக் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டது.

அதே சமயம், சந்தேகத்திற்குரிய இணையத் தளங்களை வலம் வர வேண்டாமென்றும், Apple-லின் அதிகாரப்பூர்வத் தளங்களிலிருந்து மட்டுமே செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுமாறும் MCMC ஆலோசனைக் கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!