
ஜோகூர் பாரு, நவம்பர்- 3,
BAS.MY பேருந்தின் மாத பாஸ் விலை 50 ரிங்கிட்டிலிருந்து 30 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய விலை உடனடியாக அமலுக்கு வரும் நிலையில், தற்போதைய தினசரி பயணச் செலவு வெறும் 1 ரிங்கிட் மட்டுமல்லாது ஒரு சுற்றுப் பயணத்திற்கு 50 சென் மட்டுமே செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாத பாஸ் செயல்முறை, மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதைத் தொடர்ந்து வரையற்ற பயணங்களையும் அவர்களுக்கு அனுமதிக்கிறது.
இந்த மலிவு பொதுப் போக்குவரத்து சேவையில், 30 ரிங்கிட் பாஸ் நிரந்தரமாக நீடிக்கும் என்றும் அதனை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் சலுகை பாஸை விண்ணப்பித்த பிறகு மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்கலாம்.
இச்சலுகைகளின் வழி, பயணிகளின் எண்ணிக்கை விரைவில் ஒரு மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்ப்பதாக லோக் தெரிவித்தார்.
				
					
					


