Latestஉலகம்விளையாட்டு

Bodo/Glimt அணியிடம் தோல்வி கண்ட Manchester City அணி; ரசிகர்களின் டிக்கெட் கட்டணத்தைத் திருப்பி வழங்க முடிவு

லண்டன், ஜனவரி 22 – சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நோர்வேயின் Bodo/Glimt அணியிடம் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, Manchester City வீரர்கள் ரசிகர்களுக்கான டிக்கெட் செலவுகளை திருப்பி வழங்க முடிவு செய்துள்ளனர்.

Bodo நகரம் வரை பயணம் செய்த 374 ரசிகர்களின் டிக்கெட் கட்டணத்தை காற்பந்து வீரர்களே ஏற்க உள்ளனர். Aspmyra மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஒன்றின் விலை சுமார் 25 Pound Sterling என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் குளிரிலும் நீண்ட தூரப் பயணத்திலும் அணியை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, Manchester City அணியின் கேப்டன்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான மோசமான முடிவுகளால் Manchester City அணி சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த நிவாரண நடவடிக்கையை அதிகாரப்பூர்வ ரசிகர் சங்கம் வரவேற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!