
நியூயார்க், டிசம்பர் 19 – ‘Brown’ பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக ஆடவன், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
அந்தக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் நிலையில் அவன் போர்த்துகல் நாட்டைச் சார்ந்தவர் என்றும் அதே பல்கலைக்கழக மாணவன் என்றும் அப்பகுதி போலீஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த அந்த ஆடவன் இரண்டு துப்பாக்கிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவன் தனித்து செயல்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பு கருதுகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, பல்கலைக்கழக தேர்வு நேரத்தின் போது நடந்த இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அப்பகுதியில் நடந்த மற்றொரு கொலையிலும் இந்த ஆடவன் தொடர்புடையவனாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.



