
ஜோகூர் பாரு, நவம்பர்-5 – சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தின் (BSI) சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்திற்கு பாதசாரிகள் பயன்படுத்தும் குறுக்குப் பாதையை மீண்டும் திறப்பது குறித்து, ஜோகூர் மாநில அரசு இன்னமும் கலந்தாலோசித்து வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது மூடப்பட்ட அக்குறுக்குப் பாதையை மீண்டும் திறப்பதில், பாதுகாப்புக் குறித்த ஐயமே பெரும் சவாலாக இருப்பதாக, மாநில அரசு கூறியது.
நெரிசல் பிரச்னையைக் களைவதற்கான அமைச்சரவை சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் அவ்விவகாரத்தை எழுப்பினோம்.
ஆனால், பாதுகாப்புக் காரணமே அதற்குத் தடைக்கல்லாக இருப்பதாக பதில் வந்ததாக, பொதுப்பணி, போக்குவரத்து, வசதிக் கட்டமைப்பு மற்றும் தொடர்புத் துறைக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Mohamad Fazli Mohamad Salleh தெரிவித்தார்.
என்றாலும், அந்தக் குறுக்குப் பாதையை CIQ-வுக்குச் செல்லும் பாதசாரிகளுக்கான மூன்றாவது பாதையாக அறிவிக்கும் பரிந்துரை தொடர்பில் உள்துறை அமைச்சுடன் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
வரும் மாதங்களில் நல்ல முடிவு கிடைக்குமென Fazli நம்பிக்கைத் தெரிவித்தார்.