
பேங்காக், பிப் 27 – தாய்லந்தில் Bueng Kan மாநிலத்தில் நகரான்மை
கழக ஆய்வுக் குழுவை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் இன்று Prachinburi மலையில் இறங்கும் போது கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்ததோடு, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி அதிகாலை மூன்று மணியளவில் நிகழ்ந்தது . Phon Charoen மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அந்த பஸ் , ராயோங் மாநிலத்திற்கு செல்லும் வழியில் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்தது.
தொடக்கக் கட்ட அறிக்கையின்படி 17 பேர் உயிரிழந்ததோடு பலர் காயம் அடைந்ததாக தாய்லாந்தின் நெடுஞ்சாலை போலீஸ்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
காயம் அடைந்தவர்கள் Na Di மருத்துவமனை மற்றும் Kabin Buri மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
Rayong ஆய்வு பயணத்தில் மூன்று பஸ்களைச் சேர்ந்த பயணிகள் சென்றதாக தாய்லாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
விபத்துக்குள்ளான பஸ் air-conditioned வசதி கொண்ட இரண்டு அடுக்குகளை கொண்டதாகும். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.