
பெட்டாலிங் ஜெயா மார்ச் -26-BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் மானியத்தின் மாதாந்திர 300 லிட்டர் வரம்பு, இடைக்கால நடவடிக்கையாக 200 லிட்டராக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்..
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கத்தை சமாளிக்க இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
RM1.99 ஒரு லிட்டருக்கு வழங்கப்படும் இந்த மானிய எரிபொருளுக்கான புதிய வரம்பு, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BUDI95 திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
RON95 எண்ணெய் மானியம் தகுதி பெற்ற மலேசியர்களுக்கே கிடைக்கச் செய்வதுடன், வெளிநாட்டவர்கள் மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்கான தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.



