Latest
California-இல், துப்பாக்கி சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா; குழந்தைகள் உட்பட நால்வர் பலி

கலிபோர்னியா, டிசம்பர் 1 – கடந்த சனிக்கிழமை, அமெரிக்கா ‘California’-இல் நிகழ்ந்த பிறந்தநாள் விழாவில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அச்சம்பவத்தில் மேலும் 11 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
100 முதல் 150 பேர் வரை கலந்து கொண்ட அவ்விழாவில் சம்பந்தப்பட்ட அக்கும்பல் திட்டமிட்டுதான் இந்தத் தாக்குதலைச் செய்தனர் என்று போலீசார் தெரிவித்திருந்தனர்.
மேலும் சந்தேக நபர்களைப் போலீசார் வலை வீசி தேடி வருவதோடு அனைத்து கோணங்களிலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் இவ்வாண்டு வரை 500-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.



