Latestமலேசியா

முன்னாள் Tronoh மாநில சட்டமன்ற உறுப்பினர் Paul Yong-கின் சிறை தண்டனை தொடர்கிறது

புத்ராஜெயா, பிப்ரவரி 6 – Tronoh தொகுதியின் முன்னாள் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADUN) Paul Yong Choo Kiong மீது விதிக்கப்பட்ட சிறை மற்றும் பிரம்படி தண்டனையை மலேசிய கூட்டரசு நீதிமன்றம் மீளாய்வு செய்ய அனுமதி வழங்கவில்லை .

இந்த வழக்கில் நீதிக்கான அடிப்படை விதிகள் மீறப்படவில்லை என்றும், மீளாய்வுக்கு தேவையான சட்ட நிபந்தனைகளை Paul Yong பூர்த்தி செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனால், வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தில், Paul Yong மீது விதிக்கப்பட்ட 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 பிரம்படிகளும் தொடரும்.

55 வயதான Paul Yong, ஆரஞ்சு நிற சிறை உடை அணிந்து, கையுறைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் இருந்தனர்.

முன்னதாக, 2019 ஜூலை 7 அன்று, ஈப்போவில் உள்ள தனது வீட்டில், 23 வயதுடைய இந்தோனேஷிய வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
2022 ஜூலை 27 அன்று, ஈப்போ உயர் நீதிமன்றம் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை மற்றும் 2 பிரம்படிகள் தண்டனை விதித்தது.

பின்னர், 2024 மார்ச் 1 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் குற்றச்சாட்டை உறுதி செய்து, சிறை தண்டனையை 8 ஆண்டுகளாக குறைத்தது.

இந்த வழக்கில், மொத்தம் 23 சாட்சிகள், அதில் இரண்டு பாதுகாக்கப்பட்ட சாட்சிகள் உட்பட, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!