Latestமலேசியா

CEO பெயரில் WhatsApp-பில் பரவியத் தகவலை நாங்கள் வெளியிடவில்லை; LHDN விளக்கம்

புத்ராஜெயா, அக்டோபர்-17, WhatsApp-பில் பரவி வருவது போல் தனது தலைமை செயலதிகாரி (CEO) பெயரில் எந்தவோர் அறிக்கையையோ குஞ்செய்தியையோ வெளியிடவில்லை என உள்நாட்டு வருமான வரி வாரியம் (LHDN) தெளிவுப்படுத்தியுள்ளது.

எனவே LHDN CEO-வின் பெயர் எந்தவொரு சமூக ஊடகத்திலோ அல்லது பொது மக்களைக் குழப்பக் கூடிய வகையிலோ பயன்படுத்தப்படுவதை கடுமையாகக் கருதுவதாக, LHDN வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

LHDN பெயரைக் கூறிக் கொண்டு வரும் அது போன்ற தகவல்களை பகிர வேண்டாமென பொது மக்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LHDN அனுமதியில்லாமல் அவ்வாரியம் குறித்த எந்தவொரு தகவலும் WhatsApp-பில் பகிரப்படக் கூடாது.

மீறினால், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233-வது பிரிவின் கீழும் குற்றவியல் சட்டத்தின் 505-வது பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என LHDN எச்சரித்தது.

சந்தேகத்திற்குரிய வகையிலான WhatsApp தகவல்கள், மின்னஞ்சல்கள், link இணைப்புகள் போன்றவற்றைக் கண்டால் கவனமாக இருக்க வேண்டுமென்பதோடு, சம்பந்தப்பட்ட எண்களை block செய்திடல் வேண்டும்.

அது குறித்து புகார் செய்ய வேண்டியதும் அனைவரின் பொறுப்பாகுமென LHDN நினைவுப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!