
ஜோகூர் பாரு, ஜூலை-30- நாடளாவிய நிலையில் மாபெரும் விற்பனைக் கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது Colours of India.
அவ்வரிசையில், மீண்டுமொரு பிரமாண்ட விற்பனை பெருவிழா உங்களைச் சந்திக்க வருகிறது.
ஜோகூர் பாரு, Toppen Shopping Centre பேரங்காடியின் கீழ் தளத்தில் உள்ள கண்காட்சி மண்டபத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 3 வரை Southern Indian International EXPO விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.
அனைத்துலக அளவிலான இவ்விற்பனைப் பெருவிழாவில் பொது மக்களுக்கு ஏராளமானத் தேர்வுகளை வழங்குவதற்காக 110 விற்பனைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சமாக போலிவூட் விழா, பானி பூரி விழா, வைரல் உணவு விழா, சேலை விழா, குனாஃபா விழா, ஆஹா கல்யாணம் இந்தியத் திருமண விழா உள்ளிட்ட 10 விழாக்கள் ஒரே இடத்தில் உங்களை மகிழ்விக்கவுள்ளன.
பிரியாணி பிரியர்களுக்காக பிரியாணி விழா, இசை விரும்பிகளுக்கு இசைக் கலாச்சார விழாவும் உண்டு.
எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இவ்விற்பனை விழாவில் மறக்காமல் வந்து கலந்துகொள்ளுமாறு பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்.
ஒரே இடத்தில் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைப்பதால் இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.