Latestமலேசியா

“Counter setting” லஞ்சப் புகாரில் 18 அமுலாக்க அதிகாரிகள் கைது; MACC அதிரடி

கோலாலம்பூர், செப்டம்பர்-11 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய அதிரடிச் சோதனைகளில் 18 அமுலாக்க அதிகாரிகள் உட்பட 27 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர்.

வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க, counter setting முறையில் அவர்கள் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர், மலாக்கா, கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நடத்தப்பட்ட அச்சோதனைகளில், 2 லட்சம் ரிங்கிட் ரொக்கம், ஆபரணங்கள், தங்க கட்டிகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கைப்பைகள், கடிகாரங்கள் மற்றும் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே நேரத்தில் 40 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் தொகை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கைதுச் செய்யப்பட்டவர்கள் 3 முதல் 7 நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!