Latestமலேசியா

Cradle Fund CEO கொலை வழக்கு: சமிரா மற்றும் இருவரின் விடுதலை உறுதி

புத்ராஜெயா, ஜனவரி 7 – Cradle Fund நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Nazrin Hassan, கொலை வழக்கில், அவரது மனைவி Samirah Muzaffar மற்றும் மேலும் இருவர் மீது விதிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் தீர்ப்பை, நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிபதி Hakim Abu Bakar தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வானது, கொலை குற்றச்சாட்டுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற அரசுத் தரப்பின் மேல்முறையீட்டை நிராகரித்தது. சந்தேக நபர்கள் மூவரும் நஸ்ரினுக்கு தீங்கு விளைவித்ததாக எந்த உந்துதலும் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அவை கொலை குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று முத்தியாரா டாமன்சாராவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, 2022 இல் உயர்நீதிமன்றமும் 2024 இல் மேல் நீதிமன்றமும் ஏற்கனவே விடுதலை தீர்ப்பை வழங்கியிருந்த நிலையில், இன்றைய தீர்ப்பு அதனை இறுதியாக உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!