
கோலாலம்பூர், ஜூன்-3 – IPO எனப்படும் தத்தம் முதல் பொதுப்பங்கு வெளியீட்டு விண்ணப்பத்தை முதலீட்டாளர்கள் மீட்டுக் கொள்ள, Cuckoo International (Malaysia) Bhd ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
ஜூன் 24-ஆம் தேதி மலேசியப் பங்குச் சந்தையின் முதன்மைப் பலகையில் அது மீண்டும் பட்டியலிடப்படவிருப்பதை அடுத்து, இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், தோல் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பராமரிப்பு சேவைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்துகொண்டுள்ள “ஆரோக்கியமான வீட்டு உருவாக்குநரே” இந்த Cockoo International (Malaysia) நிறுவனமாகும்.
இந்நிலையில் IPO விலையில் 143,280,000 வெளியீட்டுப் பங்குகளை வெளியிடுவதன் மூலம் 184.8 மில்லியன் ரிங்கிட் தொகையை திரட்ட அந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதன் மூலம் அதன் சந்தை மூலதனம் ஏறக்குறைய 1.85 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும்.
CUCKOO Malaysia தனது IPO வருமானத்தில் 56.7 விழுக்காட்டை அதன் வாடகை வணிகத்தின் விரிவாக்கத்திற்காக பொருள் வாங்குதல்களுக்கு நிதியளிக்கவும்; 21.6 விழுக்காட்டை வங்கி கடன்களை திருப்பிச் செலுத்தவும்; 2.7 விழுக்காட்டை ‘பிராண்ட்ஷாப்ஸ்’ திறப்பதற்கும்; 3.0 விழுக்காட்டை IT அமைப்புகளை மேம்படுத்துவதற்கும்; 5.4 விழுக்காட்டை CUCKOO International (S) Pte Ltd-டின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளது;
மீதமுள்ள வருமானம் பட்டியல் தொடர்பான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இன்று, CUCKOO Malaysia நாடு முழுவதும் வலுவான முத்திரை இருப்புடன் நம்பகமான வீட்டுப் பெயராக வளர்ந்துள்ளது.
Frost & Sullivan GIC Malaysia Sdn Bhd (“Frost & Sullivan”) படி, CUCKOO Malaysia மலேசியாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கான வாடகைத் துறையில் இரண்டாவது பெரிய நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.