Latestமலேசியா

DAPயில் பதவி போராட்டம் செல்வாக்கு நெருக்கடியே தவிர கொள்கைக்காக அல்ல – பேராசிரியர் டாக்டர் ராமசாமி

கோலாலம்பூர், பிப் 20 – இன்று DAPகுள் ஏற்பட்டுள்ள போராட்டம் அடிப்படையில் அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்காகவே தவிர கொள்கைக்காக அல்ல என பினாங்கு முன்னாள் முதலமைச்சரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர்கள் கட்சியின் அரசாங்கப் பதவியில் அதிக செல்வாக்கை நாடியுள்ளனர். அதே நேரத்தில் இளைய தலைவர்கள் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உட்பட மலாய் தலைவர்களுடன் ஒத்துழைக்க விருப்பம் காட்டியுள்ளனர் என தனது முகநூலில் பதிவிட்டுள்ள அறிக்கையில் ராமசாமி சுட்டிக்காட்டினார்.

2023 மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, சக்திவாய்ந்த ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு மூலம் மூத்த தலைமை குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைப் பெற்றது.

பினாங்கில், முதலமைச்சரின் அதிகாரத்தை குறைக்கும்வகையில் குறிப்பிட்ட மாநில தலைவர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதேபோல், சிலாங்கூரில் ஒரு வெளிப்படையான இந்தியத் தலைவர் மூத்த தலைவர்களுடன் இணையவில்லை என்பதற்காக 2022 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த முறை பினாங்கில் சில இந்திய தலைவர்கள் மூத்த தலைவர்களின் விசுவாசிகளால் மாற்றப்பட்டனர். பினாங்கு தலைவர் பதவி உட்பட கட்சியின் முக்கிய பதவிகளில் இளைய தலைவர்கள் கட்டுப்பாட்டை பெற்றபோது அவர்களில் சிலருக்கு கூட்டரசு நிலையில் அமைச்சர் பதவிகள் மறுக்கப்பட்டன.

விரைவில் நடைபெறவிருக்கும் கட்சியின் மத்திய செயற்குழு தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற சில மூத்த தலைவர்களின் முடிவு அவர்கள் உட்கட்சி பூசல்களில் இருந்து பின்வாங்குவதை காட்டுவதாக டாக்டர் ராமசாமி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!