Latestமலேசியா

DASH நெடுஞ்சாலையில் கார்-மோட்டார் சைக்கிள் விபத்து; 30 மீட்டர் உயர மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்

ஷா ஆலாம், பிப்ரவரி-26 – DASH எனப்படும் டாமான்சாரா – ஷா ஆலாம் அடுக்கு நெடுஞ்சாலையில் பெண்ணொருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் உரசியதால், 30 மீட்டர் உயர மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு அவர் உயிரிழந்தார்.

30 வயது அப்பெண்
நேற்று மாலை 6.50 மணியளவில் ஒரு வளைவைக் கடக்கும் போது அவ்விபத்து ஏற்பட்டதாக, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் தெரிவித்தார்.

அவ்வளவு உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் மரணமடைந்தார்.

தீயணைப்பு-மீட்புத் துறையினர் அவரின் உடலை மீட்டனர்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு ஷாருல் நிசாம் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!