
கோலாலம்பூர், ஜனவரி-24-கோலாலம்பூரில் 2026 இரமலான் சந்தைக்கான வியாபாரத் தள வாடகை RM500-ரிலிருந்து RM400-ராகக் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ அதனை அறிவித்துள்ளார்.
புதிய வாடகையில் கனோப்பிக் கூடாரம் மற்றும் பொது பொறுப்பு காப்பீடும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை சிறு வியாபாரிகளின் சுமையை குறைப்பதையும், வியாபாரத் தளங்களை மறுபடியும் வாடகைக்கு விடுதல் அல்லது அதிக இலாபம் பெறும் முயற்சிகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL நேரடியாக 9 இடங்களை நிர்வகிக்கும்; ஏனைய 32 இடங்களை வியாபாரிகள் சங்கம் நடத்துகிறது.
இவ்வேளையில், புத்ராஜெயாவில் இரமலான் சந்தை வாடகை RM1,000-மாகவே தொடருகிறது.
இரமலான் மாதத்தில் DBKL, சுகாதார அமைச்சு மற்றும் KPDN தினசரி கண்காணிப்புகளை மேற்கொள்ளும்.
அவை உணவுகளின் தரம், நியாயமான விலை, மற்றும் சுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
கோலாலம்பூரில் இரமலான் சந்தை வாடகை குறைந்துள்ளதால், இவ்வாண்டு இரமலான் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஒரு இணக்கமானச் சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



