கோலாலம்பூர், அக்டோபர் -20, தேர்ந்தெடுக்கப்பட்ட இரயில் நிலையங்களிலிருந்து ஒருவழிப் பயணத்திற்கு வெறும் 50 சென் கட்டணத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் சேவை, DRT முறையில் நடைமுறைக்கு வரும்.
போக்குவரத்து அமைச்சு அதனைத் தெரிவித்துள்ளது.
DRT என்பது தேவையுணர்ந்து செயல்படும் போக்குவரத்துச் சேவையாகும்.
இந்த DRT முன்னோடித் திட்டத்திற்கு ஸ்ரீ ரம்பாய் மற்றும் மெலாத்தி LRT நிலையங்களை உட்படுத்திய இரு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
2025 வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அத்திட்டமானது, பள்ளி மாணவர்களுக்கு மாற்று போக்குவரத்து முறையாக விளங்கும்.
இதன் மூலம், மாணவர்கள் மிகக் குறைந்த விலையில் ஆனால் வசதிப்படும் வகையில் பள்ளிச் சென்று வர வாய்ப்பேற்படும் என அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.
நடப்பில் பள்ளி வேன் சேவை மாதத்திற்கு 90 ரிங்கிட் கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த DRT சேவை, மாணவர்களுக்கு 50 சென் கட்டணத்திலும் மற்றவர்களுக்கு 1 ரிங்கிட் கட்டணத்திலும் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.