கோலாலம்பூர், செப்டம்பர் -7 – கோலாலம்பூர், செந்தூல் அருகேயுள்ள DUKE நெடுஞ்சாலையில் லாரி மோதியதால், காங்கிரீட் தடுப்புச் சுவரின் சிறு பகுதி இடிந்து கீழே விழுந்தது.
நேற்று பிற்பகல் 2 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், கட்டுப்பாட்டை இழந்த லாரி வேகமாக மோதிய போது, தடுப்புச் சுவர் இடிந்து கீழே சாலையிலிருந்த வாகனங்கள் மீது விழுந்தது.
எனினும் அதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என போலீஸ் உறுதிப்படுத்தியது.
சம்பவ இடத்தில், மேற்கொண்டு விசாரணைகள் கோலாலம்பூர் போக்குவரத்து போலீசாரால் மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக வைரலான புகைப்படங்களில், இடிந்து விழுந்த காங்கிரீட் சுவரின் பாகங்கள் கீழே நின்றிருந்த கெனாரி காரின் மேல் விழுந்து, காரின் முன்பகுதி சேதமடைந்ததைக் காண முடிந்தது.