Latestமலேசியா

e- ஹெய்லிங் சேவையின் மூலம் போதைப் பொருள் எடுத்துச் சென்ற இருவர் கைது

பொன்தியான் , ஏப் 13- போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வழக்கமான குற்றத் தடுப்பு ரோந்துப் பணியின்போது, ​​இ-ஹெய்லிங் சேவையைப் பயன்படுத்தி மெத்தம் பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரன் ஒருவனை கைது செய்தனர்.

இந்தச் சோதனையில் 69,080 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 36 வயது வேலையில்லாத நபரும் , 43 வயது பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Hadzrat Hussien Mion தெரிவித்தார்.

இரவு மணி 9.15 அளவில் kampung Penorok , Jalan Kup Kup சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,528 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் அல்லது ஷாபு போதைப்பொருள், கண்டெடுக்கப்பட்டது.

அண்டை நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும், கோலாலம்பூரைச் சேர்ந்த ஒருவனிடமிருந்து இந்த உத்தரவு வந்ததாக போலீசார் நம்புகின்றனர்.

ஜோகூர் பாருவின் பெர்லிங்கில் உள்ள வணிகக் கடைகளின் வரிசைக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரிலிருந்து, தொலைபேசி மூலம் தகவல்களைப் பெற்றுக்கொண்டு சந்தேக நபர் போதைப்பொருட்களை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்த நபர் ஒரு இ-ஹெய்லிங் சேவை மூலம் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதனிடையே சந்தேக நபரை ஏற்றிச் சென்ற பெண் ஓட்டுநர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதோடு , விசாரணைக்கு உதவுவதற்காக அவர் மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் Hadzrat கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!