
கோலாலம்பூர், டிசம்பர்-28 – கோலாலம்பூரில், ஒரு e-hailing ஓட்டுநர் மீது பயணி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பயணி steering lock-கைக் கொண்டு ஓட்டுநரின் முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுநரின் முகத்தில் காயம் ஏற்பட்டு அவர் உடனடியாக போலீஸில் புகாரளித்தார்.
போலீஸார் இதனை குற்றவியல் சம்பவமாக வகைப்படுத்தி தீவிர விசாரணை நடத்தியதில், 35 வயது சந்தேக நபர் கைதானார்.
அவரிடமிருந்து steering lock பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்படுகிறார்.



