
கோலாலம்பூர், மார்ச்-14 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF-புக்கு பங்களிப்பு செலுத்தாததால், கடந்தாண்டு 2,257 நிறுவன இயக்குநர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.
இதனால், 2025 டிசம்பர் வரை மொத்தம் 14,332 இயக்குநர்கள் நாட்டை விட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
EPF சட்டத்தின் பிரிவு 39-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, EPF 3,530 சிவில் வழக்குகள், 6,011 குற்றவியல் வழக்குகளையும் தொடங்கியது.
ஊழியர்கள் 21,000-க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்த நிலையில், அவற்றில் 8,868 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பை பாதுகாக்கும் நோக்கில், EPF இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பங்களிப்பு செலுத்தத் தவறினால், இயக்குநர்கள் சட்ட ரீதியான தண்டனைகளையும், பயணத் தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என EPF மீண்டும் எச்சரித்தது.



