Latestமலேசியா

ETS முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதால் கோலாலம்பூருக்கு ஜோகூர் நெருக்கமாகி இருக்கிறது

கோலாலம்பூர், டிச 11- ETS எனப்படும் மின்சார ரயில் சேவைக்கான Gemas – Johore Bahru இரட்டை
தண்டவாளத் வழித்தடம் நிறைவுபெற்றதன் மூலம் , மலேசியா இன்று தனது தேசிய போக்குவரத்து வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இ

தன் மூலம் மின்மயமாக்கப்பட்ட கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பாரு இடையேயிலான ரயில் சேவைக்கான திட்டம் நிறைவு கண்டுள்ளது.

இதற்கு முன் ஜோகூர் பாருவுக்கான தரை வழி போக்குவரத்திற்கு பிடித்த ஏழு மணி நேர பயணம் , மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தைக் கொண்ட ETS ரயில் பயண சேவை தொடங்கப்படுவதன் மூலம் பயண நேரம் இனி நான்கு மணி நேரம் 20 நிமிடங்களாகக் குறையும்.

இதன்வழி கேஎல் சென்ட்ரல்-ஜேபி சென்ட்ரல் ETS மின்சார ரயில் சேவை 3 இன் அதிகாரப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கிறது. இதற்கு முன் அதன் சேவை குளுவாங்கில் முடிந்தது. நீட்டிக்கப்பட்ட சேவை நாளை தொடங்குகிறது.

கெமாஸ்-ஜொகூர் பாரு வழித்தடத்தில் செகாமட், குளுவாங் மற்றும் கூலாய் உட்பட 11 புதிய ரயில் நிலையங்கள் உள்ளன.

ஜோகூர் ரீஜெண்ட் பட்டத்து இளவரசர் Tunku Mahkota Ismail கெம்பாஸ் பாரு ரயில் நிலையத்தில் இந்த நிகழ்வை தொடக்கி வைத்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜோகூர் மந்திரி புசார் Onn Hafiz Ghazi மற்றும் போக்குவரத்து அமைச்சர் லோக் சியு பூக் ( Loke Siew Fook ) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ETS3 இன் KL Sentral – Kluang சேவை ஆகஸ்ட் 30ஆம்தேதி மாட்சியை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!