
வாஷிங்டன், ஜனவரி-3 – உலகின் மிகப்பெரிய மின்சார கார் தயாரிப்பாளர் என்ற மகுடத்தை கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கின் தெஸ்லா இழந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் தெஸ்லா விற்பனை 8 விழுக்காடு சரிந்து 1.64 மில்லியன் வாகனங்களே விற்பனையாகின.
அதே நேரத்தில், சீனாவின் BYD நிறுவனம் 2.26 மில்லியன் மின்சார வாகனங்களை விற்று முன்னிலைப் பெற்றது.
அமெரிக்க வரிச்சலுகை முடிவடைந்தது, இலோன் மாஸ்க் மீதான அரசியல் எதிர்ப்பு, சீன மற்றும் ஐரோப்பிய போட்டியாளர்களின் எழுச்சி ஆகியவை தெஸ்லாவின் வீழ்ச்சிக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
BYD சீன சந்தையை ஆக்கிரமித்ததோடு, தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் வேகமாக சிறகை விரித்து வருகிறது.
இந்த அறிவிப்பு வெளியான கையோடு நியூ யோர்க் பங்குச் சந்தையில் தெஸ்லாவின் பங்குகள் 2.6 விழுக்காடு சரிந்தன.
BYD முன்னணி வகிக்க, மின்சார கார் போட்டி சூடுபிடித்துள்ளது…



