கோலாலம்பூர், டிசம்பர்-11, F1 கார் பந்தய ஜாம்பவான் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) மலேசியாவுக்கு பிரியாவிடை கொடுத்துள்ளார்.
2013 முதல் Mercedes AMG Petronas அணியின் ஓட்டுநராக இருந்து வரும் 39 வயது ஹாமில்டன், மலேசியா எனது இரண்டாவது வீடு என அடிக்கடி அழைத்து வந்தவர் ஆவார்.
எனினும் அவ்வணியின் முதன்மை ஓட்டுநர் என்ற அவரின் பயணம் இவ்வாண்டுடன் முடிவடைகிறது.
அடுத்தாண்டு முதல் மற்றொரு பிரபல அணியான ஃபெராரியில் (Ferrari) அவர் இணைகிறார்.
இதையடுத்து பிரியாவிடை கொடுப்பதற்காக மலேசியா வந்துள்ள ஹாமில்டன், KLCC-யில் ‘Farewell for the superstar’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக இரசிகர்களைச் சந்தித்தார்.
F1 கார் பந்தயங்களின் 7 முறை உலக வெற்றியாளருமான
ஹாமில்டனான அந்த 45 நிமிட சந்திப்பு அவருக்கும் இரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
இங்கு கொண்டு வந்ததற்கு, Mercedes AMG அணிக்கும் பெட்ரோனாசுக்கும் நன்றி கடன் பட்டிருப்பதாகவும், இந்த 12 ஆண்டுகளும் அற்புதமானவை என்றும்
அவர் வருணித்தார்.
ஹாமில்டனுடன் இணைந்தன் மூலம், இந்த 12 ஆண்டுகளில் Mercedes AMG Petronas அணியின் பெயரும் மலேசியாவின் பெயரும் உலகளவில் மேலும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.