
கோலாலம்பூர், அக்டோபர் 28 –
வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் (NSE), கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘Ferrari’ வாகன விபத்துக்கு PLUS நிறுவனம் பொறுப்பாகாது என ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணா பாலரவி பிள்ளை தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி, அவரை 2,000 ரிங்கிட் செலுத்த உத்தரவிட்டது.
விரைவுச்சாலையில் இருந்த “அந்நிய பொருள்” ஒன்றுடன் அவரது Ferrari கார் மோதி சேதமடைந்ததாக கூறி, PLUS நிறுவனம் அலட்சியம் காட்டியதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அதற்கு PLUS, எந்த தடையும் பதிவாகவில்லை என்றும், பல முறை கண்காணிப்பு நடைபெற்றதாகவும் மறுப்பு தெரிவித்தது.
வழக்கறிஞர் கூறியபடி “அந்நிய பொருள்” இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாததால் அவரது மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விபத்து நடந்ததால் மட்டுமே PLUS நிறுவனத்தை பொறுப்பாகக் கொள்ள முடியாது என்றும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.



