ஷா ஆலாம், செப்டம்பர்-10 – ஷா ஆலாம், செக்ஷன் 14, தாசேக் ஷா ஆலாமில் flying fox கேபிள் சாகச நடவடிக்கையில் ஈடுபட 12 வயதுக்கும் கீழ்பட்ட சிறார்களுக்கு அனுமதியுண்டு.
ஆனால், பெரியவர்கள் கண்டிப்பாக உடனிருக்க வேண்டுமென நிபந்தனை உள்ளது.
Flying fox நடவடிக்கையின் போது தாயும் பிள்ளையும் 30 மீட்டர் உயரத்தில் 15 நிமிடங்களுக்கு அந்தரத்தில் சிக்கிக் கொண்ட சம்பவத்தை அடுத்து, நெட்டிசன்கள் எழுப்பியக் கேள்விக்கு பதிலளிக்கையில், ஷா ஆலாம் மாநகர மன்றம் MBSA அவ்வாறு விளக்கமளித்தது.
Flying fox நடத்துநரான Hikers Climbers Adventures Sdn Bhd அதில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவத்தைக் கொண்டுள்ளது.
அந்த விளையாட்டுத் தளவாடங்களைக் கையாள்வதில் தேர்ந்த 15 பணியாளர்களும் இருக்கின்றனர்.
அந்த ‘zipline’-னில் ஏறும் முன்பாக ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு விளக்களிப்பு நடைபெறும்;
பயன்படுத்தப்படும் தளவாடங்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கும் பராமரிப்புப் பணிகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன.
சம்பவத்தன்று கேபில் கயிற்றில் சிக்கிக் கொண்ட இருவரையும், zipline பணியாளர்கள் விரைந்து அவர்களை புறப்பட்ட இடத்திற்கே இழுத்துக் காப்பாற்றினர்.
Bearing-ங்கில் ஏற்பட்ட கோளாறால் pulley கருவி சிக்கிக் கொண்டதே அச்சம்பவத்திற்குக் காரணம் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து பராமரிப்புப் பணிகளுக்காக, அச்சேவை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.